Tuesday, May 15, 2012

சித்தர்கள் குறிப்பு:

தமிழ் மண்ணின் பொக்கிசங்களாக போற்ற பட வேண்டியவர்கள் சித்தர்கள் , உலகமே இன்று கொண்டாடபடும் யோகக் கலையின் பிதாமகன்கள் .
இத்தகைய சித்த புருஷர்கள் தங்கள் யோக பலத்தால் செய்த சாகசங்களும்,வாழ்ந்த காலங்களும் நம்மால் நம்ப முடியாத உண்மைகள்.

காலத்தை வென்று மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தூம்,ரசவாதத்தினால் இரும்பை பொன்னாகியும்,கூடு வீடு கூடு பாய்ந்தும்,மூச்சடக்கி விமானங்களாக வானத்தில் பறந்தும், நவக்கிரகங்களை வாசபடித்தியும் பலவாறாக அதிசிய சாதனைகளை புரிந்து இருகிறார்கள்


இயற்கைக்கு மாறான பல அற்புதங்களையெல்லாம் செய்த வல்லவர்கள் ; வெறும் சித்து விளையாட்டோடு நிற்கவில்லை யோகம்,அறிவு,வைத்தியம் போன்ற பல அறிய
பெரிய விஷயங்களை நமது நன்மைக்காக அருளி செய்திருக்கிறார்கள் .இவர்கள், நம் பிறப்பின் நோக்கத்தை நமக்கு அறிவித்து, நம்மை நல்வலிப்படுத்தி இறைவனுடன் இனிதாக இணைத்து வைக்க வேண்டி தோன்றிய அவதார புருஷர்கள்.
பார்போற்றும் பதினெட்டு சித்தர்கள் பெயர்கள்  :
1.திருமூலர்
2.போகர்
3.கருவூரார்
4.புலிப்பாணி
5.கொங்கனர்
6.அகப்பேய் சித்தர்
7.சட்டைமுனி
8.சுந்தரானந்தர்
9.தேரையர்
10.கோரக்கர்
11.அகத்தியர்
12.பாம்பாட்டி சித்தர்
13.சிவவாக்கியர்
14.உரோமரிசி
15.காகபூசன்டர்
16.இடைக்காட்டு சித்தர்
17.குதம்பை சித்தர்
18.பதஞ்சலி முனிவர்.  


3 comments:

  1. சித்தர்கள் பற்றிய சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. a href="http://www.makkalsanthai.com/bloggers">தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)</a

    ReplyDelete
  3. தங்கள் நட்பில் இணைந்து கொண்டேன் நண்பா

    ReplyDelete