Saturday, March 17, 2012

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

* பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

* பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.

* பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.


0 comments:

Post a Comment