Sunday, February 5, 2012

தீ‌க்சா சேத்தின் சிம்புராணம்

சிம்பு படம் தொடங்கினாலே, அவர்கூட நடிக்காதீங்க என்று ஹீரோயின்களை கேர்ஃபுல்லாக எச்ச‌ரிக்கிறது ஒரு கூட்டம். இந்த பனிப்போரை தாண்டி நடிகைகள் சிம்பு மீது கொடியாக படர்வதுதான் உலக மகா ஆச்ச‌ரியம்.

சனா கான், ‌ரிச்சா, ஹன்சிகா வ‌ரிசையில் வேட்டை மன்னன் நாயகி தீக்சா சேத்தும் சிம்புப் புராணம் படிக்கிறார். எங்கிட்ட சிலர் சிம்பு பத்தி தப்பா சொன்னாங்க. ஆனா நான் சிம்புவோட ரசிகை. அவர் நடிச்ச எல்லாப் படத்தையும் பார்த்திடுவேன், சிம்பு சிம்‌ப்ளி கிரேட் என்று உருகுகிறது பொண்ணு.

வேட்டை மன்னனில் ஹன்சிகாவா, தீக்சாவா யார் ஹீரோயின் என்ற குழப்பம் தனி ட்ராக்கில் ஓடுகிறது. இந்த ரேஸில் முதலிடம் வாங்குவதற்குதான் இந்த வழிசல் என்றும் உடுக்கடிக்கிறார்கள். உண்மையா மேடம்? 
source:webdunia 


0 comments:

Post a Comment