ஷங்கரின் அடுத்தப் படத்தில்
விக்ரம் நடிப்பது ஏறக்குறைய உறுதி என்ற நிலையில் இன்னொரு சூறாவளி
கோடம்பாக்கத்தில் கிளம்பியிருக்கிறது. ஷங்கர், கமல் இணைகிறார்கள்
என்பதுதான் அந்தச் செய்தி.
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் கமல் நடிக்கிறார். இந்தப் படத்தை ஷங்கர் இயக்குகிறார். படத்தில் மோகன்லாலும், பிரபாஸும் நடிக்கிறார்கள். கத்ரினாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. ஷங்கர், கமல் கூட்டணி என்ற செய்தியை ஒட்டி பின்னப்பட்ட உதிரி செய்திகள் இவை. கமல் முன்பு எடுப்பதாக இருந்த தலைவன் இருக்கின்றான் கதையைதான் ஷங்கர் இயக்குகிறார் என்கிறார்கள்.
நண்பன் முடிந்ததும் வெளிநாடுக்கு டூர் சென்ற ஷங்கர் இன்னும் சென்னை திரும்பவில்லை. அவர் வந்த பிறகுதான் இந்தக் கூட்டணி பற்றி முழுமையாகச் சொல்ல முடியும் என்கிறார்கள் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில்.
source:webdunia

0 comments:
Post a Comment