Tuesday, January 31, 2012

எனக்குப் பதில் சிறந்த கேப்டன் இருந்தால் வழிவிடத் தயார்- தோனி

டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை விட சிறப்பாக யாரேனும் தலைமை வகிக்க முடியுமெனில் நான் மகிழ்ச்சியுடன் வழி விடுகிறேன் என்று இந்திய அணித் தலைவர் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா அணிகளிடம் 8- 0 என்று தோல்வியடைந்ததையடுத்து கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் தோனியின் டெஸ்ட் தலைமை உத்தி குறித்து கடும் விமர்சனங்களை வைத்தனர்.

"தலைமைப்பொறுப்பு ஒருவருக்கானதல்ல, இப்போதைக்கு நான் தலைமை வகிக்கிறேன். இது ஒரு கூடுதல் பொறுப்பு அவ்வளவே. நான் இருக்கும்வரை ஒழுங்காக செயல்பட விரும்புகிறேன். ஆனால் அதிலேயே ஒட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு பதில் வேறொருவர் சிறப்பாக இருந்தால் அவர் தலைமையேற்கலாம்.

கடைசியில் இந்திய அணி சிறப்பாக செயல்படவேண்டும் என்பதே விருப்பம். என்னைவிட இன்னொருவர் சிறப்பாக இருந்தால் அவர் தலைமை ஏற்பதில் எனக்கு ஒன்றும் இல்லை. அது ஒன்றும் என்னுடன் ஒட்டிக் கொண்ட விஷயமல்ல.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது. நான் அதன் தேவைகளை பூர்த்தி செய்வதில் முயற்சிகளை மேற்கொண்டேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது பயணம் முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. நான் இதில் எந்த முடிவையும் எட்டவில்லை. இது தனி நபர் எடுக்கும் முடிவல்ல, மற்றவர்கள் நான் இதற்கு சிறப்பானவனா என்பதை முடிவு செய்யவேண்டும்.
 ஒரு வீரராக நான் 100% பங்களிக்கிறேன், நான் என்ன செய்கிறேனோ அதனை இன்னமும் செய்துதான் வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையான கிரிக்கெட், அதற்காக பிற வடிவங்களை மதிக்கவில்லை என்று கூறமுடியாது. ஒவ்வொரு வடிவத்திலும் கிரிக்கெட் சவாலானது.

ஒருநாள் கிரிக்கெட் அணி வித்தியாசமாக உள்ளது. இங்கு சப்தம் அதிகம் இதனால் ஓய்வறைச் சூழல் ஊக்கமளிப்பதாக இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் ஆட்டம் பற்றி பேசும்போது ஓய்வறை உயிரூட்டமுள்ளதாக இருக்கும். உண்மையில் ஒரு நாள் அணி மிக மிக வித்தியாசமானது.

கிஷோர் குமாரிலிருந்து ஷான் பாலிற்கு மாறுவதுபோல் இந்த தலைமுறை வித்தியாசமானது. இது சப்தம் மிகுந்தது.

அனைத்தும் கலந்த ஒரு விஷயம் சுவாரசியமாக இருக்கும், கர்நாடக இசையிலிருந்து ராப் இசை வரை அனைத்தும் கலந்திருக்கவேண்டும்.

வயது என்பது ஒரு எண் அவ்வளவே. நன்றாக ஆடினால் வயது குறித்து சர்ச்சை எழாது. ரன்கள் அடித்துக் கொண்டேயிருந்தால் யார் வயதைப் பற்றி பேசப்போகிறார்கள்?

தற்போது ரைனா உள்ளார், கோலி இருக்கிறார், ரோஹித் ஷர்மா ஒரு திறமையான வீரர், ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்காத நிலையில் இருந்திருக்கிறோம்.

முதலில் இந்த இரண்டு இருபது ஓவர் கிரிக்கெட்டையும் வெற்றி பெறுவதுதான் திட்டம், ஒருநாள் கிரிக்கெட் பிறகு"

இவ்வாறு கூறினார் தோனி.
source:webdunia
 


0 comments:

Post a Comment