Thursday, January 5, 2012

மீண்டும் பீமா கூட்டணி:லிங்குசாமி

தில், தூள், சாமி ஃபார்முக்கு திரும்புகிறார் விக்ரம். அதன் முதல்படி, சுசீந்திரனின் ராஜபாட்டை.

இதனைத் தொடர்ந்து விக்ரமின் ஃபேவரைட் இயக்குனர் தரணியின் இயக்கத்தில் நடிக்கிறார். புதிய தகவல்... லிங்குசாமியும் இந்த‌ப் பட்டியலில் உண்டு.

பையா படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் கிராஃப் உயர்ந்திருக்கிறது. மூன்று மொழிகளில் தயாராகிவரும் வேட்டை வெளிவந்தால் லிங்குவின் மார்க்கெட் இன்னும் உயரும். முன்னணி ஹீரோக்கள் இவர் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக விக்ரம் தெ‌ரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய பீமா வருடங்களை சாப்பிட்டதே தவிர பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெறவில்லை. அந்தக் குறையை புதிய படம் நிவர்த்தி செய்யும் என்று நம்பலாம்.


0 comments:

Post a Comment