Wednesday, December 21, 2011

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி

கான்பெர்ரா: ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ராவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய தூதரகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான தூதர் சுஜாதா சிங், இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி மற்றும் இந்திய குழுவை வரவேற்றார்.
இந்த நிகச்சியில் ஆஸ்திரேலிய அமைச்சர் மார்டின் பெர்குசனுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதரகம் ஆஸ்திரேலியாவில் உள்ள எல்லா இந்திய அமைப்புகளின் தலைவர்களை அழைத்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் காப்டன் டோனி பேசும்போது நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து உரேனியம் மட்டும் இறக்குமதி செய்யவில்லை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஹைடன், ஹசி போன்றவர்களையும் ஐ பி எல் தொடரில் விளையாட இறக்குமதி செய்துள்ளோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் டோனி ஆஸ்திரேலிய அமைச்சர் மார்டின் பெர்குசனுக்கும் இந்திய தூதரத்திற்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


0 comments:

Post a Comment