Thursday, December 22, 2011

அஞ்சல் துறையில் ஒட்டுநர் பணி

இந்திய அஞ்சல் துறையின் கோயம்புத்தூர் மெயில் மோட்டார் பணிப்பிரிவில் ஏற்பட்டுள்ள ஒட்டுநர் காலி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: Time Scale Driver
காலியிடங்கள்: 3 (OBC-1, GEN-2)
கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.5,200 - 20,200 கிரேடு சம்பளம் ரூ.1,900
பணி அனுபவம்:  4 வருட பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அரசு அதிகாரிகளின்கையெழுத்து பெறப்பட்ட சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் எழுத படிக்க மறஅறும் எளிதில் கணக்கிடும் திறனும் பெற்றிருத்தல் அவசியம்.

வயதுவரம்பு: 01.07.2011 தேதிப்படி 21லிருந்து 28-க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

2. பணியின் பெயர்: M.V (Mechanic (Skilled)
காலியிடம்: 1 (பொது)
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2011 தேதிப்படி 18-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை: விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டபின் தகுதியானவர்களஅ தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரங்கள் விண்ணப்பத்தாரர்களுக்கு தபால்மூலம் தெரிவிக்கப்படும்.

Time Scale Driver பணிக்கு எழுத படிக்கும் திறன், அடிப்படை கணிதம் மற்றும் இலகுரக, கனரக மோட்டார் வாகன ஒட்டுதல், சட்ட விதிகள் போன்ற தேர்வுகள் நடத்தப்படும்.  M.V .Mechanic பணிக்கு சம்மந்தப்பட்ட டிரேடில் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பபடிவத்தில் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படத்தை ஒட்டி அட்டெஸ்ட் பெற்றிருக்க வேண்டும். வயது, கல்வித்தகுதி, அனுபவம், ஒட்டுநர் உரிமம், ஜாதி மற்றும் வகுப்பு ஆகியவற்றிற்கான சான்றிதழ்களின் நகல்கள் அட்டெஸ்ட் பெறப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப உறையின் மீது ''Application for the Post of ----------inMail Motor Service Coimbatore'' என்று (பணியின் பெயர்) எழுத வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 04.01.2012
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Manager, Mail Motor Service, Good Shed Road, Coimbatore - 641001.
மேலும் விவரங்களுக்கு டிசம்பர் 14 -20 EMPLOYMENT SERVICE இதழை பார்க்கவும்.


0 comments:

Post a Comment