Saturday, December 17, 2011

உங்கள் ஆயுளை அறிய ஆர்வமா?


மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் வளர்ச்சியை பொறுத்தே நமது ஆயுள் நிர்ணயிக்கப்படுகிறது. அதிகமான மன அழுத்தம்,கோபம்,கவலைபோன்ற காரணங்களால் குரோமோசோம்களின்டெலிமியர்கள் குட்டையாகி விடுகின்றனடெலிமியர்கள் என்பது குரோமோசோம்களின் வளர்ச்சி விகிதம். குரோமோசோம்களின் நீண்ட வளர்ச்சியைப் பொருத்தே நமது நீண்ட ஆயுள் உள்ளது

                நாம் அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளாகும் போதும், அதிகமாக கோபப்படுவதினாலும் கவலைப்படுவதினாலும் இந்த டெலிமியர்களின் வளர்ச்சி குறைந்து விடுகிறது. இதனால் நாம் நமது ஆயுளை படிப்படையாக இழந்து வருவதோடு மலட்டுத் தன்மையும் அடைகிறோம்.

                 அதிகமான ஆண்கள் வெள்ளை காலர் ஜாப் செய்வதையே விரும்புவதால் மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 24% ஆண் மலட்டுத் தன்மை அதிகரித்துள்ளது.

                எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் ஏசி அறையிலே அமர்ந்து வேலை செய்யும் பெரும்பாலானோருக்கு இன்று இந்த நிலை தான். சென்ற ஆண்டை விட , இந்த ஆண்டு மலட்டுத்தன்மையால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
                 
 மிகுந்த ஆயுளோடும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க நினைப்பவர்கள் டெலிமியர்களின் வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு மன அழுத்தத்தை குறைப்பதோடு முறையான உடல் பயிற்சியும் அவசியமானது.


0 comments:

Post a Comment