Saturday, December 24, 2011

விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? - நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!

குறிப்பிட்ட ரசிகர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி ரசிக்கப்படும் நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கஷ்டப்பட்டு நல்ல நடிகர் என்ற இமேஜையும், தேசிய விருதையும் பெற்ற அவரது படங்களை ரசிகர்கள் ஓரளவுக்கு எதிர்ப்பார்க்கவே செய்கிறார்கள்.

தெய்வத் திருமகள் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் காப்பியாக இருந்தாலும், விக்ரம் நடிப்புக்காக அந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு அதிரடியாக ஒரு படம் தருவதாகக் கூறி ராஜபாட்டையை வெளியிட்டுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

குறிப்பாக திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த சுசீந்திரன், தேசிய விருது பெற்ற விக்ரம் காம்பினேஷனில் உருவாகும் படம் என்பதால், தூள், சாமி ரேஞ்சுக்கு ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, ஜேகே ரித்தீஷ் படம் அளவுக்குக் கூட இல்லையே என்ற விமர்சனம் ராஜபாட்டை மீது விழுந்துவிட்டது (இந்தப் படத்தில் லத்தீஸ்வரன் என்று ஒரு ஹீரோவை வேறு விக்ரம் விமர்சனம் பண்ணுகிறார். அது ஜேகே ரித்தீஷா, லத்திகா ஹீரோ பவர் ஸ்டாரா என்ற காமெடி விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது!)

இந்த நிலையில், ராஜபாட்டைக்காக நிருபர்களைச் சந்தித்தார் நடிகர் விக்ரம். இன்று ரெஸிடென்ஸி டவரில் நடந்த இந்த சந்திப்பின்போது, நிருபர்கள் நேரடியாகவே விக்ரமிடம் இந்தப் படம் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சுசீந்திரன் - விக்ரம் என்றதும், பெரும் எதிர்ப்பார்ப்பு உருவானது. அதைப் பொய்யாக்கிவிட்டதே இந்தப் படம். ஏன் இப்படியொரு படம் தந்தீர்கள் விக்ரம்? என்று கேள்வி எழுப்ப, சற்று சுதாரித்து பதில் தந்தார் விக்ரம்.

தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு ஜாலியா, அதிரடியா, கலர்புல்லா ஒரு படம் தரணும் என்று விரும்பித்தான் இந்தப் படம் செய்தோம். இந்தக் கதை எனக்கு மிகவும பிடித்துப் போனதால் ஒப்புக் கொண்டோம். ஒரே மாதிரி சீரியஸ் படம் கொடுத்தா ரசிகர்களுக்கு அலுத்துப் போகும் என்பதால் எடுத்த முடிவு அது. நீங்கள் தியேட்டரில் ரசிகர்களோடு படம் பாருங்கள் (நேற்று நிருபர்களுடன் படம் பார்த்தார் விக்ரம்!!). ரசிகர்கள் எந்த அளவுக்கு இந்தப் படத்தை ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள். நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது," என்றார்!

சரி... படத்தில் வரும் நில அபகரிப்பு அக்கா கேரக்டர் நிஜத்தில் யாருங்க?


0 comments:

Post a Comment