Monday, December 19, 2011

சன் டிவி அலுவலகத்தில் படம் பிடிக்கப்பட்ட மிஷன் இம்பாசிபிள்!!


மிஷன் இம்பாசிபிள்-4 கோஸ்ட் புரோடோகால் படத்தின் முக்கிய கிளைமாக்ஸ் காட்சிகள் சன் டிவி அலுவலகத்தில் தான் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

மும்பையில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் சென்னை சன் டிவி அலுவலகத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு ரஷ்ய அணு ஆயுத விஞ்ஞானி உலகில் அணு ஆயுதப் போரை தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபடுகிறார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் தாக்குதல் நடத்தி, ரஷ்ய அணு ஏவுகணைகளை செலுத்த உதவும் codeகளை திருடுகிறார்.

இந்த codeகளைக் கொண்டு, ரஷ்ய அணு ஆயுத ஏவுகணையை அமெரிக்கா மீது செலுத்த மும்பை வருகிறார்.

இந்தியாவில் மாபெரும் தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தி வரும் பிரிஜ் நாத்தின் (அனில் கபூர்) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பழைய ரஷ்ய செயற்கைக் கோளின் உதவியோடு இந்த ஏவுகணையை செலுத்த வருகிறார் அந்த ரஷ்ய விஞ்ஞானி.

இதற்காக மும்பையில் ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தின் satellitte uplinking மையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தபடியே ரஷ்ய அணு ஏவுகணையை செலுத்துகிறார். ஏவப்பட்ட அணு ஏவுகணையை செயலிழக்கச் செய்ய 'ஹீரோ' டாம் க்ரூயிஸ் தனது டீமுடன் அங்கு வந்து மோதலில் ஈடுபடுவது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

இந்தக் காட்சிகளில் வரும் தொலைக்காட்சி அலுவலகம் சன் டிவி அலுவலகம் தான். அதன் satellitte uplinking அறைக்குள் வில்லன் நுழையும்போது அங்குள்ள தொலைக்காட்சி ஸ்கீரின்களில் சன் டிவி, சன் நியூஸ், கே.டிவி, சுட்டி டிவி என தமிழ் சேனல்கள் ஓடுகின்றன.

ஹாலிவுட்டின் இந்த ஆண்டின் மிக பிரமாண்டமான ஆக்ஷன் படத்தில் நம் ஊர் சேனல்களைப் பார்த்தவுடன், விசில் பறக்கிறது.

மும்பையில் நடப்பதாகக் காட்டப்படும் இந்தக் காட்சிகளின் சில பகுதிகள் பெங்களூரில் எடுக்கப்பட்டுள்ளன. ஒயிட்பீல்டில் உள்ள ஐடிபிஎல் கட்டிடத்தில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில் கன்னடமும், சன் டிவி அலுவலகத்தில எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில் தமிழ் எழுத்துக்களும் வருகின்றன.

படத்தின் டைரக்டருக்கு இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் பேசப்படுவது வெவ்வேறு மொழி என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. இதனால் ஒரே இடத்தில் நடப்பதாக சொல்லப்படும் காட்சிகளில் 3 மாநிலங்களும் தமிழ், கன்னடம், இந்தி, மராத்தி எல்லாமே நான்கு மொழிகளும் எட்டிப் பார்க்கின்றன.

இது ஒரு பெரிய குறையா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன். காரணம், படத்தின் ஆக்ஷன் அப்படி.. துபாயின் உலகிலேயே மிக உயரமான ப்ருஜ் கலிபா கட்டடத்தின் வெளியே டூப் போடாமல் டாம் க்ரூயில் வெளியே தொங்கும் காட்சி ஒன்றுக்காகவே, இந்தப் படத்தின் எல்லா குறைகளையும் மறந்துவிடலாம்.


0 comments:

Post a Comment