Friday, December 30, 2011

ரேங்கிங்: சச்சின் முன்னேற்றம்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 4வது இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்ட் அரங்கில், சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் சச்சின் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். இவர், 4வது இடத்தை தென் ஆப்ரிக்க "ஆல்-ரவுண்டர்' காலிசுடன் பகிர்ந்து கொண்டார். சமீபத்திய மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததே இந்த முன்னேற்றத்துக்கு காரணம். மெல்போர்ன் டெஸ்டில் பேட்டிங்கில் சோபிக்கத்தவறிய சீனியர் வீரர் ராகுல் டிராவிட், இரண்டு இடங்கள் பின்தங்கி, 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான லட்சுமண் (17வது இடம்), சேவக் (18வது) "டாப்-20' வரிசையில் உள்ளனர்.


பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், ஐந்து இடங்கள் முன்னேறி 42வது இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் பீட்டர் சிடில், ஐந்து இடங்கள் முன்னேறி, 7வது இடத்தை, இலங்கையின் ஹெராத்துடன் பகிர்ந்து கொண்டார். மெல்போர்ன் டெஸ்டில் வேகத்தில் அசத்திய ஆஸ்திரேலியாவின் பென் ஹில்பெனாஸ் (22வது இடம்), ஜேம்ஸ் பட்டின்சன் (31வது) ஆகியோர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்


0 comments:

Post a Comment