Thursday, December 22, 2011

தற்கொலை செய்யக்கூடாது: விஜயகாந்த் "அட்வைஸ்'

சென்னை: ""மக்கள் அனைவரும் சேர்ந்து போராடக்கூடிய பிரச்னைகளுக்காக யாரும் தற்கொலை செய்யக்கூடாது'' என கட்சி தொண்டர்களுக்கு விஜயகாந்த் கண்டிப்புடன் ஆலோசனை கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் சீலையம்பட்டி பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (எ) இடிமுழக்கம் சேகர்,42, தே.மு.தி.க.,வின் தலைமைக் கழக பேச்சாளர். கடந்த 20ம் தேதி மாலை விருத்தாசலத்திற்கு வந்தவர், அங்குள்ள லாட்ஜில் தற் கொலை செய்து கொண்டார். அங்கிருந்த கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறி வருகிறார். அவ்வாறு அணையை உடைத்தால் ஐந்து மாவட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். அந்த அணையை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். அணைக்காக நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

விஜயகாந்த் அறிவுரை: மக்கள் அனைவரும் சேர்ந்து போராடக் கூடிய பிரச்சனைகளுக்காக யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: முல்லை பெரியாறு அணை பிரச்னைக்காக, தேனி மாவட்டத்தை சேர்ந்த தே.மு.தி.க., பேச்சாளர் இடிமுழக்கம் சேகர், விஷம் குடித்து இறந்த செய்திக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாட்டு பிரச்னைகளை மனதில் கொண்டு இளைஞர்கள், தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம். தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து போராடக்கூடிய இப்பிரச்னைகள், தங்கள் உயிரை போக்கி கொள்வதால் மட்டும் தீர்க்க முடியாது. எனவே, எதிர்காலத்தில் இத்தகைய உணர்ச்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment