Thursday, December 22, 2011

புதுச்சேரியில் முதல் ஐ.டி. பூங்கா

புதுவை: புதுச்சேரி மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, ஐ.டி. பூங்காவை கொண்டுவர மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறினார்.

ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, "படிப்பை முடித்ததும், மாணவர்கள் வேலைக்காக சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் என்று சென்று விடுகின்றனர். நமது மாநிலத்திலேயே ஒரு ஐ.டி. பார்க் வந்துவிட்டால், நமது மாணவர்கள் வெளியூர் செல்வதை தவிர்க்கலாம்.

பிற மாநில மாணவர்களைக் காட்டிலும், புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக சலுகைகளைப் பெறுகின்றனர். ஆனால், நமது அரசுப் பள்ளிகளால் 100 சதவிகித தேர்ச்சி என்ற இலக்கை எட்ட முடிவதில்லை. இது வருத்தமளிக்கிறது. மேலும், இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தேவையான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், தற்போது அந்தக் கல்லூரியானது இடப்பற்றாக்குறை காரணமாக கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் இடத்தைப் பகிர்ந்துகொள்கிறது" என்றார்.


0 comments:

Post a Comment