Saturday, December 17, 2011

நூற்றாண்டு விழாவுக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது பாம்பன் பாலம்


ஆற்றிலா ஊருக்கு அழகு பாழ்என்பார்கள். பல ஆறுகளும் நதிகளும் இணையும் சங்கமமாக பாம்பன் பாலம் உள்ளது. முன்னொரு காலத்தில்
இராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்யும் மக்கள் படகு வழியாகவே தங்கள் பயணத்தை தொடங்கினர். சூறாவளி,கடல் கொந்தளிப்பு,பேரழைகளினால் கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் படகு போக்குவரத்தும் அந்த நாட்களில் ரத்து செய்யப்படும். இதனால் உரிய நேரத்தில் எங்கேயும் செல்ல முடியாமல் தவித்த இராமேஸ்வர மக்களுக்காக உருவாக்கப் பட்டது தான் பாம்பன் பாலம். 1911 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு நிறைவு பெற உள்ளது.
                         
  கடல் மேலே இருப்புப் பாதை அமைப்பது என்பது சாதாரணமா என்ன? பாம்பன் பாலத்தை கட்டி முடிக்கும் முன் பல நூறு பேர்கள் மாண்டனர். அன்று பல உயிர்களை பழிவாங்கிய பாம்பன், இன்றோ பல உயிர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை அளித்து வருகிறது. அன்னை இந்திரா காந்தி பாலம் என்ற புனைப் பெயரும் பாம்பன் பாலத்திற்கு உண்டு.

 முக்கடல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா! முப்பயணத்தை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோமா? ஒரே இடத்தில் தரை வழியாகவும், கடல்
வழியாகவும் தொடருந்து வழியாகவும் பயணம் செய்யும் ஒரே இடம் இந்த பாம்பன் தான்.

  சுமார் 2.3 கிலோ மீட்டர் நீளமுடய கடல் மேலே உள்ள தொடருந்து பாலம் இந்தியாவிலே முதலிடத்திலும், உலக அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. 143 தூண்களைக்(பில்லர்கள்) கொண்டு      
தொடருந்துப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் மீட்டர் கேஜாக இருந்ததை தற்போது 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் நாள் இந்தியன் இரயில்வே அகலப் பாதையாக மாற்றி புதுப்பித்தது. அமெரிக்காவில் உள்ள மயாமி பாலம் தான் உலக அளவில் உள்ள முதல் பெரிய பாலம்.

 ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 10 கப்பல்களாவது இந்த பாம்பன் தொடருந்து பாலத்தை கடந்து செல்கின்றன. அதற்கேற்றவாறு தொடருந்தின்  மத்தியப் பகுதி மேல் எழும்பி வளைந்து நின்று கப்பலுக்கு வழி கொடுக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

  இங்கே உள்ள  மீன் பிடித்தொழிலாளர்களிடம் பாம்பனைப் பற்றிய கருத்தினைக் கேட்ட போது, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த கடற்கரையின் குடிசைகளில் தான் வாழ்ந்து வருகிறோம். நான் பிறந்தது முதல் இந்த பாம்பன் பாலம் இங்கே தான் உள்ளது. என் தாத்தா காலத்தில் தான் இந்த பாலம் கட்டப்பட்டதாக சொன்னார். எங்களைப் போன்ற மீனவர்கள் பலரும் சித்தாளாக பணிபுரிந்து இந்த பாலம் கட்டுவதற்கு உதவினோம் என என் தாத்தா கூறினார். அதில் பலியானவர்களில் என் அன்னையும் ஒருவர் என்று கண்ணீர் மல்க சொல்கிறார் குப்புசாமி

 அதிகப்படியான வெளிநாட்டு மக்கள் இராமேஸ்வரத்தை சுற்றுலா தளங்களுள் ஒன்றாக எண்ணுவதற்கு முதல் காரணமே இந்த அதிசயிக்கத்தக்க பாம்பன் பாலமே. அதோடு மட்டுமல்லாது வெளிநாட்டு வாழ் சுற்றுலாப் பயணிகளால் அதிக அளவில் நமது தமிழகத்திற்கு லாபம் கிடைக்கிறது.
 அப்படிப் பட்ட பாம்பனின் நூற்றாண்டு விழாவை நமது தமிழகம் மறந்து விடலாமா?


0 comments:

Post a Comment