Friday, December 30, 2011

வசூலில் கலக்கிய 10 படங்கள்

தமிழில் இந்த வருடம் 120 படங்கள் ரிலீசாகின. ஆனால் மிகக் குறைந்த படங்களே தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டின. சிறு பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் தோல்வி அடைந்து நஷ்டத்தை ஏற்ப டுத்தின.
காஞ்சனா, மங்காத்தா இரண்டும் இவ்வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படங் களாக அமைந்தன.
அஜீத் வில்லன் வேடத்தில் வந்த மங்காத்தாவுக்கு படம் ரீலிசின்போது ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை தினமாக இருந்ததும் படத்தின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது.
காஞ்சனா பேய் படமாக வந்தது. கொலை, ரத்தம் என்று இல்லாமல் காமெடித் தனமாக இதன் திரைக் கதையை கையாண்டது, குழந்தைகளையும், பெண்களையும் பெருமளவில் கவர்ந்து இழுத்தது. இதனால் இப்படம் கோடி கோடியாய் வசூல் ஈட்டியது. பிற மாநிலங் களிலும் “காஞ்சனா” சக்கை போடு போட்டது.
கோ, சிறுத்தை, எங்கேயும் எப்போதும் படங்கள் இவ் வாண்டின் சூப்பர் ஹிட் படங்கள் அந்தஸ்தை பெற்றுள்ளன.

கோ படத்தின் திரைக் கதையும், பாடல்கள், ஒளிப் பதிவும் அனைத்து தரப்பி னரையும் கவர்ந்தது. ஜீவா, கார்த்திகா ஜோடி கச்சிதமாக பொருந்தினர். கே.வி. ஆனந்த் இயக்கி இருந்தார்.

எங்கேயும் எப்போதும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்தார். பஸ் விபத்தை வைத்து கதை பின்னப்பட்டு இருந்தது. அழுத்தமான கதை யும் விறுவிறுப்பான காட்சி அமைப்பும் அதிர வைக்கும் கிளைமாக்சும் ரசிகர்களை கவர்ந்தன.

வேலாயுதம், 7 ஆம் அறிவு, தெய்வத்திருமகள், ஆடுகளம், வானம் படங்களும் இவ்வருடத்தின் ஹிட் படங்கள் பட்டியலில் உள்ளன.
7 ஆம் அறிவில் சூர்யாவின் போதி தர்மர் கெட்டப் பேசப்பட்டது. தெய்வத் திருமகள் படத்தில் விக்ரம் மனநலம் குன்றிய கேரக்டரில் பொருந்தி இருந்தார்.

ஆடுகளம் படம் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. வானம் படத்தில் சிம்பு கிளைமாக்சில் இறந்து போகும் ஹீரோயிசம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
காவலன், அவன் இவன், மயக்கம் என்ன படங்களும் ஆரவாரம் இல்லாமல் ஜெயித்தன.


0 comments:

Post a Comment